கோயில் கருவறைக்குள் பயங்கர தீ; 14 பேர் படுகாயம் - ஷாக் சம்பவம்!
கோயில் கருவறைக்குள் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
கோயில் கருவறை
மத்திய பிரதேசம், உஜ்ஜைன் நகரில் மகாகாளேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. அங்கு ஹோலி பண்டிகையை ஒட்டி, பஸ்ம ஆர்த்தி என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது.
அப்போது, கருவறைக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே, தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து
இதில், கோயில் தலைமை அர்ச்சகர் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவிடம் பேசியதாக கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.