பற்றி எரியும் கிணற்று நீர்: காரணம் இதுதானா?

india police village
By Jon Jan 28, 2021 10:48 PM GMT
Report

தமிழக- கேரள எல்லையில் அமைந்திருக்கும் பனச்சமோடு கிராமத்தை சேர்ந்த கோபி என்பவரது கிணற்று நீர் பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளது.

கோபியின் குடும்பத்தினர் வழக்கம்போல் கிணற்று நீரை பயன்படுத்தி வந்துள்ளனர், ஆனால் கடந்த சில நாட்களாக தண்ணீரில் திடீரென பெட்ரோல் வாசம் வீசியதால் சந்தேகம் அடைந்த கோபி, கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரை எடுத்து தீ பற்ற வைத்து சோதித்தார்.

அப்பொழுது வாளியில் இருந்த தண்ணீர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. பல ஆண்டுகளாக வீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த கிணற்றுத் தண்ணீர் இப்படி திடீரென பெட்ரோல் நறுமணத்துடன் இருப்பதையும், தீப்பிடிப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த கோபி, இதற்கு என்ன காரணமாக இருக்கும் என விசாரித்தபோது, கோபியின் வீட்டுக்கு அருகிலுள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இருந்த பெட்ரோல் சேமிப்புக் கலன் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பெட்ரோல் கசிந்து கிணற்றில் உள்ள நீருடன் கலந்திருக்கலாம்.

அதனால் நீர் தீப்பிடித்து இருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கேரளாவின் பாரசலை காவல்துறையினரும், தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்ட பலுகல் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.