அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து .. விரைந்து செயல்பட்ட ஊழியர்கள்.. காப்பாற்றபட்ட பச்சிளங்குழந்தைகள்!
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மகப்பேறு அரசு மருத்துவமனையில் மருத்துவர் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
.மருத்துவர் அறையிலுள்ள ஏ சி யில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டு புகை சூழ்ந்ததால் அங்கிருந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பத்திரமாக வேறொரு இடத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.
தீ பரவிய அறையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் குறை பிரசவம் ஆன குழந்தைகள் இங்குபேட்டர் கருவியில் 2 குழந்தைகள் என மொத்தம் 36 குழந்தைகள் அறையில் இருந்தன.
தீவிபத்து ஏற்பட்டு அந்த புகையினால் சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உயிருக்கே ஆபத்து எனும் சூழ்நிலையில் உடனடியாக செவிலியர்களும், மருத்துவர்களும் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை வேறு அறைக்கு மாற்றினர்.
உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாலாஜா சாலையில் இருந்து தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தது.
தீ விபத்து ஏற்பட்ட சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு திமுக எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.