சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து : மின் கசிவா , ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பா ?
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2 - வது பிளாக்கில் கல்லீரல் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதகா முதலில் செய்திகள் வெளியான நிலையில், தீ விபத்துக்கான காரணம் ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பா அல்லது மின் கசிவா என விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் :
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறினார் , மேலும், உள்ளே இருப்பவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கபட்டதாகவும் கூறிய நிலையில் ஆக்சிஜன் குடோன் இருந்த 10 சிலிண்டர்களில் 3 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியான நிலையில் தீ விபத்துக்கான காரணம் ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பா அல்லது மின் கசிவா என விசாரணை நடைபெற்று வருகிறது.