மின் கசிவுதான் தீ விபத்திற்கு காரணம் , ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து குறித்து அமைச்சர் விளக்கம்

By Irumporai Apr 27, 2022 06:10 AM GMT
Report

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2 - வது பிளாக்கில் கல்லீரல் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் உபகரணங்கள் வைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

அதிக புகையுடன் இருப்பதால் உள்ளே இருப்பவர்களை மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் போது அந்த கட்டிடத்தில இருந்து பொருள் வெடித்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. அந்த கட்டடத்தில் 3 நோயாளிகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த கட்டடத்தில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து தீயணைப்புதுறையினர் ஜன்னல் வழியாக தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைத்து கொண்டிருந்த போது வெடிச்சத்தம் ஏற்பட்டதால் அங்கு தீயணைப்பு வீரர்கள் பதற்றம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் : மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், உள்ளே இருப்பவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கபட்டதாகவும் கூறினார்.