கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - காயம் அடைந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள்

Fire Injury WestBengal FireAccident
By Thahir Mar 12, 2022 08:17 PM GMT
Report

கொல்கத்தாவில் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் டாங்க்ரா பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.

தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயை அணைக்கும் போது இரண்டு தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து உள்ளுர் மக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டறிந்தார்.

தீப் பிடித்து எரிந்த தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்குள் யாராவது சிக்கியுள்ளனரா என்பது குறித்த விபரங்கள் முழுமையாக வெளியாகவில்லை.