புகைமூட்டமான பகுதி - சென்னையில் முழுவதுமாக கருகிய ஜவுளி கடை
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இரண்டு ஜவுளி கடைகளில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கேளம்பாக்க ஜவுளி கடைகள்
கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக் கடையில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படிப்படியாக தீ பரவத் தொடங்கிய நிலையில், உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்த தீயணைப்பு வீரர்கள்
5 வாகனங்களில் தீயணைப்பு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடம் முழுவதும் தீ பரவியதன் காரணமாக தீயணை கட்டுப்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. தனியார் டேங்கர் லாரிகளில் நீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜவுளிக் கடை 2 மாடிகளை கொண்ட நிலையில், இரு தளங்களும் முழுவதுமாக இதில் சேதமடைந்துள்ளன.
இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.