கள்ளக்குறிச்சியில் பயங்கரம்: பட்டாசுக்கடை தீவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்

கள்ளக்குறிச்சிவெடிவிபத்து crackersshop
By Petchi Avudaiappan Oct 26, 2021 04:28 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விபத்து
Report

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பட்டாசு விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது. ஆங்காங்கே பட்டாசு கடைகளும் முளைத்துள்ளன. இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் செல்வம் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு கடை உள்ளது.

இங்கு பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்  பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பட்டாசு கடையில் பட்டாசு வாங்க நின்று கொண்டு இருந்த சிலர் காயத்துடன் வெளியே வந்துவிட தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

மேலும் இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் வீடியோ வெளியாகி காண்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.