பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து- 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பல்

Fire accident
By Nandhini Apr 18, 2021 08:15 AM GMT
Report

காட்பாடி, லத்தேரி பேருந்து நிலையம் அருகில் பட்டாசு கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாயின.

பட்டாசு கடையின் உரிமையாளர் மோகன் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு கடையில் தீ மளமளவென எரிந்து வருகிறது.

காட்பாடி தீயணைப்பு வாகனங்கள் வர கால தாமதம் ஆனதால் பொதுமக்களே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு போலீசாரும், காட்பாடி டி.எஸ்.பி. ரவிச்சந்திரனும்  விரைந்து சென்றுள்ளனர்.  

பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து- 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பல் | Fire Accident