இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட வீடியோ: ட்விட்டர் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு

சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒன்றை நீக்குவது தொடர்பான விவகாரத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வரும் 72 வயது அப்துல் சமத் என்ற இஸ்லாமிய முதியவரை 6 பேர் சேர்ந்த ஒரு கும்பல் தரதரவென இழுத்துச் சென்று, தாடியை சேவ் செய்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகநூலில் வீடியோவை வெளியிட்ட அப்துல் கனி என்பவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்பச் சொல்லி அந்த கும்பல் வற்புறுத்தியதாக செய்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காசியாபாத் போலீசார் வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துக்கள், வீடியோக்களை நீக்கம் செய்ய ட்விட்டர் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ட்விட்டரில் இந்த நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ட்விட்டர் மீது பதிவு செய்யப்படும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்