மது விருந்தில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர் : வைரலாகும் வீடியோ

Viral Video Finland
By Irumporai Aug 19, 2022 04:05 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் ,மது போதையில் தனது நண்பர்களுடன் மது போதையில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பின்லாந்து பிரதமர்

உலக அளவில் தலைசிறந்த கல்வியை வழங்குவதில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. தற்போது பின்லாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் 34 வயதான சன்னா மரீன் ஆட்சியில் உள்ளார்.

மது விருந்தில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர் : வைரலாகும் வீடியோ | Finland Female Pm Punching Party Viral

சர்ச்சையில் சிக்கிய பிரதமர்

உலகின் இளம் வயது உள்ள பிரதமரான இவர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது அடுக்குமாடி குடியிருப்பில் தன் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்று குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நாட்டின்மிகப் பெரிய பொறுப்பில் இருக்க கூடிய பிரதமர் மது அருந்தி குத்தாட்டம் போடும் வீடியோவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.