கணவரை காணவில்லை - புகாரளித்த மனைவிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்!

Tamil nadu Madurai
By Sumathi Dec 17, 2022 05:41 AM GMT
Report

கணவரை காணவில்லை என மனு தாக்கல் செய்த மனைவிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதாம் விதிக்கப்பட்டுள்ளது.

கணவரை காணோம்

மதுரை, வெள்ளியம் குன்றத்தைச் சேர்ந்தவர் உஷா. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நானும் எனது கணவர் சவுடியும் மதுரை புதூரில் ஹோட்டல் நடத்தி வருகிறோம்.

கணவரை காணவில்லை - புகாரளித்த மனைவிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்! | Fine Of 150 Lakh Was Imposed On The Wife Madurai

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹோட்டலுக்கான கட்டிடத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக விவேக் என்னும் நபரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஜனவரி விவேக் அவரது அடியாட்களுடன் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு மிரட்டினார். இதுதொடர்பாக நவம்பர் 24 ம் தேதி காவல்துறையினரிடம் எனது கணவர் புகார் அளித்தார்.

மனைவிக்கு அபராதம்

28ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு புதூர் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்த நிலையில் விசாரணைக்காக சென்ற எனது கணவர் வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே எனது கணவரை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், மனைவி, அவரது கணவரை மருத்துவமனை ஒன்றில் இருந்ததாக அறிந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பின்பு ஏன் திரும்ப பெறவில்லை என கேள்வி எழுப்பி,

சட்ட விதிகளை தவறாக பயன்படுத்தியதற்காக மனுதாரருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.