விஜயகாந்தை கொன்றவர்களை கண்டுபிடிங்க; அடுத்து நீங்களும், ஸ்டாலின் சாரும் தான்.. - பகீர் கிளப்பும் இயக்குநர்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், விஜயகாந்த் மறைவு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பதிவொன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரேமம், நேரம் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், விஜயகாந்த் மறைவு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பதிவொன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து, "நான் உங்களை கேரளாவிலிருந்து வந்து ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தில் சந்தித்தபோது, உங்களை அரசியலுக்கு வரும்படி கூறினேன்.
சர்ச்சை பதிவு
மேலும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டறியும்படி கூறினேன். இப்போது கேப்டன் விஜயகாந்தை கொன்றவர்களை நீங்கள் கண்டறிய வேண்டும்.
ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசனையும் அவர்கள் கொலை செய்ய முயன்றுள்ளார். இதை அப்படியே விட்டுவிட்டால், அடுத்து நீங்களும், ஸ்டாலின் சாரும்தான் டார்கெட்டாக இருப்பீர்கள்.
கொலையாளிகளையம், அவர்கள் நோக்கத்தையும் கண்டு பிடிப்பது உங்களுக்கு எளிமையான விஷயமே" என்று குறிப்பிட்டுள்ளார். அல்போன்ஸ் புத்ரனின் இந்த பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.