தலை அடையாற்றில், உடல் காசிமேட்டில், கை, கால்கள் வீட்டில் : தகாத உறவால் நேர்ந்த கொடூர சம்பவம் !
பெண்னுடன் ஏற்பட்ட தகாத உறவால் ஃபைனான்சியர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணலியை சேர்ந்த ஃபைனான்சியர் சக்கிரபானி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி முதல் தந்தையை காணவில்லை என்று இவரது மகன் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்ததில் சக்கிரபானியின் செல்ஃபோன் சிக்னல் ராயப்புரத்தை அடுத்த கிரேஸ் கார்டன் பகுதியை சேர்ந்த தமீன் பானு என்பவரின் வீட்டில் காட்டியுள்ளது. மேலும் சக்கிரபானி பயன்படுத்திய இருச்சக்கர வாகனமும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் தமீன் பானுவின் வீட்டில் சோதனை நடத்தியதில் சாக்கு மூட்டையில் சக்கிரபானியின் கை மற்றும் கால்கள் வெட்டபட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடிகிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த சக்கிரபானிக்கும் தமீன் பானுவுக்கும் தகாத உறவு ஏற்பட்டு தமீன் பானுவின் வீட்டுக்கு சக்கிரபானி சென்றுள்ளார்.
அப்போது தமீன் பானுவின் சகோதரர் வாசிம் பாஷாவுக்கு சக்கிரபானிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் வாசிம் பாஷா சக்கிரபானியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதில் சக்கிரபானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டின் கழிவறையில் வைத்து அவரது தலையை துண்டித்து அடையாறு ஆற்றில் வீசியும், உடலை துண்டு துண்டாக வெட்டி காசிமேட்டிலும் வீசியுள்ளனர்.
கை மற்றும் கால்களை வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வீட்டில் வைத்துள்ளனர். கொலை செய்த குற்றத்திற்காக வாசிம் பாஷா மற்றும் தமீன் பானுவை கைது செய்த போலீசார் சக்கிரபானியின் தலை மற்றும் உடலை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.