உங்க வங்கி கணக்கில் இதை செஞ்சுட்டீங்களா? நாளை முதல் மாறும் ரூல்ஸ்!
பல முக்கியமான நிதி விதிகள் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
நிதி விதிகள்
நவம்பர் 2025 முதல், இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களைப் பாதிக்கும் பல முக்கியமான நிதி விதிகள் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குபவர்களிடம் இருந்து வங்கிகள் கட்டாயம் நாமினி பெயரையும் பெற வேண்டும் என்கிற விதிமுறையை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.
முக்கிய மாற்றம்
இந்த உத்தரவு டெபாசிட் கணக்குகள், லாக்கர்கள் ஆகியவற்றிருக்கும் பொருந்தும். இதன்படி, வாடிக்கையாளர்கள் நான்கு நாமினிகள் வரை நியமித்துகொள்ளலாம். கல்வி தொடர்பான பரிவர்த்தனைகள், மற்றும் ரூ.1,000-க்கு அதிகமாகச் செய்யப்படும்

மூன்றாம் தரப்பு கட்டண செயலிகள் மற்றும் வாலெட் டாப்-அப்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டில் இனி 1 சதவீத கட்டணம் விதிக்கப்படும். தடையின்றி ஓய்வூதியம் பெற, ஓய்வு பெற்றவர்கள் நவம்பர் 1 முதல் 30 வரை தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய சரக்கு மற்றும் சேவை வரி பதிவு முறை நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    