ரூ.750 கோடி நீதி மோசடி செய்த எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு
உத்திரபிரேதேச மாநிலத்தில் ரூ.750 கோடி நிதி மோசடி வழக்கில் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் சட்டசபை தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., வினய் சங்கர் திவாரி (54).
இவர் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கிகளில், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 750 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, திவாரி, அவரது மனைவி ரீட்டா மற்றும் தனியார் நிறுவன இயக்குனர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ., திவாரி உள்ளிட்டோர் மீது, 754.25 கோடி ரூபாய் வங்கி நிதி மோசடியில் ஈடுட்டதாக, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என, அதிகாரிகள் கூறினர்.