உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Aug 12, 2022 03:48 AM GMT
Report

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் நிதியுதவி 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-  காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

M K Stalin

தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்.

வீரமரணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.