ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் 2 பெண்கள் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

M K Stalin Accident Ramanathapuram Death
By Jiyath Aug 15, 2023 06:53 PM GMT
Report

சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில் "ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம், மாயாகுளம் பகுதியில் நேற்று மதியம் அரசு பேருந்தும்,

ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் 2 பெண்கள் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு! | Financial Assistance To Families Of Road Accident

தனியார் வாகனமும் எதிர்பாராத விதமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலைதடுமாறி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

நிவாரண நிதி

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.