மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கடன் குறைந்துள்ளது : தமிழக நிதியமைச்சர் தகவல்

By Irumporai Sep 23, 2022 04:46 AM GMT
Report

பணவீக்கமானது மற்ற மாநிலங்களில் 7 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் அது 5ஆக குறைக்கப்பட்டுள்ளது,தமிழகத்திற்கான கடனை குறைத்துள்ளோம். என பல்வேறு நிதி நிலைமையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம்  

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் நிதிநிலையை மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில் பல்வேரு முக்கிய நிதி அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.

அதில், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒத்துழைப்பு மூலம் தமிழ்நாட்டு நிதி துறையில் பல்வேறு சீரமைப்புகளை செய்து வருகிறோம்.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கடன் குறைந்துள்ளது : தமிழக நிதியமைச்சர் தகவல் | Finance Minster Palanivel Thiyagarajan Tamilnadu

தமிழகத்திற்கான கடனை குறைத்துள்ளோம். அதே போல, தமிழகத்தின் வளர்ச்சி பாதுகாப்பாக உள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை பாதிக்காத வகையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். 

தமிழகத்தில் குறைந்த பண வீக்கம்

பொது விநியோக திட்டத்திற்கு‌ தமிழக அரசு அதிக நிதியை ஒதுக்கி செலவு செய்து வருகிறது. பணவீக்கமானது மற்ற மாநிலங்களில் 7 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.

ஆனால், தமிழகத்தில் அது 5ஆக குறைக்கப்பட்டுள்ளது.தேவையில்லாத செலவுகளை குறைத்து தேவைக்கு மட்டும் செலவு செய்ததால் இது சாத்தியமானது. பண வீக்கம் என்பது சாமானியர்கள் செலுத்தும் வரி போன்றது.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கடன் குறைந்துள்ளது : தமிழக நிதியமைச்சர் தகவல் | Finance Minster Palanivel Thiyagarajan Tamilnadu

பணவீக்கத்தை கட்டுப்படுத்தினால், சாமானியர்களின் வாங்கும் திறனை குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். ‘ தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் தமிழக நிதி நிலைமையை எடுத்துரைத்தார்.