வெட்கமற்ற நிலைக்கு இறங்காமல் உண்மையை ஆராயுங்கள் - மருத்துவ கல்லூரி உறுதிமொழி சர்ச்சை குறித்து அமைச்சர் பி.டி.ஆர்

Madurai
By Swetha Subash May 03, 2022 06:59 AM GMT
Report

கி.மு.460-ம் ஆண்டு முதல் கி.மு.370-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஹிப்போகிரேட் மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எனவே மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட் பெயரில் உறுதிமொழி ஏற்பது மருத்துவம் படிப்போரின் வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரியில் 68-வது குழுவாக இணைந்த 250 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் ஏற்ற உறுதிமொழியில் சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. 

ஹிப்போகிரேட் பெயரில் உறுதிமொழி எடுப்பதற்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி எடுக்கப்பட்டதற்குக் கடும் கண்டனம் எழுந்த நிலையில், கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக நிதித்துறை அமைச்சர் பி. தியாகராஜன் மருத்துவ மாணவர்கள் ஏற்க்கப்பட்ட உறுதிமொழியில் சிலவற்றை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ளார்.

அதில்”எங்கிருந்து தொடங்குவது..முதலில், உண்மைகளைச் சரிபார்த்து, முழுமையாக வெட்கமற்ற நிலைக்கு இறங்குவதற்குப் பதிலாக, கண்ணியம்/ஒருமைப்பாட்டின் சிலவற்றை தக்க வைத்துக் கொள்ள முயற்சியுங்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “ படிக்கும் காலங்களில் சுயக்கட்டுப்பாடு , பக்தியுடன் இருப்பேன்” . “ முழு விருப்பத்துடன் என்னை என் குருவிடம் சமர்ப்பிக்கிறேன்" , " என் குரு விரும்பிய இலக்கை நோக்கி முழு முயற்சி செய்வேன் “, " பெண்கள்/ ஆண்கள் , செல்வம் என எதற்கும் என்னை ஊக்கப்படுத்தமாட்டேன்”,”நான் (முக்கியமாக ஆண் மருத்துவர்) பெண்களை அவரது கணவர் அல்லது உறவினர்கள் முன்னிலையில்தான் பரிசோதிப்பேன் “ என உறுதிமொழியில் இடம்பெற்ற வாக்கியங்களை மேற்கோள் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.