கடனை திருப்பி செலுத்ததால் மதுவந்தி வீட்டுக்கு சீல் - பைனான்ஸ் நிறுவனம் அதிரடி
சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட் இருக்கிறது. இந்த அபார்ட்மென்ட்டிற்குள் வீடு வாங்குவதற்காக கடந்த 2016-ல் இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி கடன் வாங்கினார்.
இதனையடுத்து, சில மாதங்கள் தவணை கட்டி இருக்கிறார். அதன் பின்பு தொடர்ந்து தவணை பணம் கட்டாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் வட்டிப் பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர்.
ஆனாலும், மதுவந்தி உரிய பதில் கூறாமல் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில், பைனான்ஸ் நிறுவனம் மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுவந்தியின் வீட்டை சீல் வைத்து சாவி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
