'' எங்க ராக் வந்துட்டான் இப்ப வாங்க 'ல '' - பும்ராவை புகழ்ந்த கோலி
பும்ராவை வரவேற்கும் விதமாக, ‘ஒரு வழியாக தி ராக் வந்துவிட்டார்’ என விராட் கோலி கூறியது ஸ்டம்ப் மைக்கில் அப்படியே பதிவாகியது தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டின் எல்கர், ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இந்திய வீரர் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆட்டத்தின் 11வது ஓவரை வீசும் போது கால் சறுக்கி கீழே விழுந்த பும்ரா களத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின்பு தேநீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தின் 60ஆவது ஓவரை அவர் திரும்பி வந்து வீசினார்.
Virat Kohli when Jasprit Bumrah resumed the bowling - "finally the rock has come back".#ViratKohli |#Bumrah |#INDvSA pic.twitter.com/tNRffZVqhq
— VӀRⱭƬ ƘƠӇlӀ Ƒ.Ƈ?? (@kholi_c) December 29, 2021
அந்த சமயத்தில் அவர் பந்துவீச வருவதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி, “எங்களுடைய ராக் பந்துவீச வந்துவிட்டார்” என்று கூறியது ஸ்டம்ப் மைக் வழியாக கேட்டது. இதனை பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் பும்ராவை WWE சூப்பர் ஸ்டார் ராக் உடன் விராட் கோலி ஒப்பிட்டுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்