படப்பிடிப்பில் விபத்து நடிகர் நாசர் மருத்துமனையில் அனுமதி

Nassar Tamil Cinema
By Thahir 3 மாதங்கள் முன்

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தி நடிகர் நாசருக்கு காயம் ஏற்படவே அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் நடிகர் நாசர்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் நாசர்,இவர் நடிகர், இயக்குநர்,குணசித்திர நடிகர், வில்லன் நடிகர் உள்ளிட்ட பல கதாப்பதாத்திரங்களுக்கு சொந்தகாரர்.

Nasser M

64 வயதாகும் நடிகர் நாசர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கானா போலீஸ் அகாடாமியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நாசருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் உடனடியாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.