நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் காலமானார்
நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆர்.பி.சௌத்ரி உயிரிழப்பு
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

இந்த நிறுவனம் மூலம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஆர்.பி.சௌத்ரி 3 முறை ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.
ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட இவர், நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷின் தந்தை ஆவார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான உதய்பூருக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆர்.பி.சௌத்ரியின் மறைவு திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.சௌத்ரியின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.