திரைப்படத் படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் மாராடைப்பால் காலமானார் - திரைத்துறையினர் இரங்கல்..!
பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் மாரடைப்பால் இன்று காலமானார்.
பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர்
தமிழ் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, கழுகு உள்ளிட்ட 35 திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
படிக்காதவன், சர்வர் சுந்தரம், விக்ரம் உள்ளிட்ட பல படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். இதுமட்டுமல்லாமல் 5 படங்களை இயக்கியுள்ளார்.
மாராடைப்பால் காலமானார்
மேலும் 3 படங்களை தயாரித்துள்ளார். இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர்.
தமிழ் திரையுலகில் ஒட்டுமொத்தமாக 300 படங்களுக்கும் கூடுதலாக படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார்இ அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan