"திரைப்பட இயக்குனர் கெளதமன் கைது.."
திரைப்பட இயக்குனரும் , தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கௌதமன் தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் கோயில் வழிபாட்டு உரிமை பிரச்சனையில் உயிரிழந்த நான்கு பேருக்கு நடுகல் வழிபாடு செய்யவும்,
காந்தாரியம்மன் சிலை அடிக்கல் நாட்டிற்காகவும் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார் வ.கௌதமன் அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளத்தில் காந்தாரியம்மன் கோயிலில் வழிபடுவது தொடர்பாக இரு சமூகங்களுக்கு இடையே பிரச்னை நிலவி வருகிறது.
அதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது இன்று மார்ச் 14-ம் தேதி சர்ச்சைக்குரிய பொது இடத்தில் காந்தாரியம்மன் சிலையை நிறுவப்போவதாக சில சமுதாய அமைப்பினரும், அரசியல் இயக்கத்தினரும் அறிவித்ததால் பதற்றம் நிலவியது.
அதனால் அந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து வந்த வ.கௌதமன் காவல்துறையினரால் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார்.