நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் காலமானார்
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமான பிரதாப் போத்தன் .தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார்.
மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார். இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வரும் பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார்.தேசியவிருதும் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் இயக்குநர் பிராதாப் மோகன் மறைவிற்கு நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.