வாட்ஸ்அப்பில் அழைத்து ஆபாசமான பேச்சு; ஓபி ரவீந்திரநாத் மீது பெண் பரபரப்பு பாலியல் தொல்லை புகார்!
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓபி ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார்.
பாலியல் புகார்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண் காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் ஆகும். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த காயத்ரி தேவி செய்தியாளர்களை சந்தித்தார்.
காயத்ரி தேவி பேட்டி
அந்த பெண் பேசியதாவது " ஓ.பி. ரவீந்திரநாத் வாட்ஸ்அப் காலில் அழைத்து தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும் திருமணம் செய்துக்கொள்வதாகவும் கூறி தகாத முறையில் பேசியதாகவும் தெரிவித்தார். ஏப்ரல் ஒன்றாம் தேதி ஓபி.ரவீந்திரநாத் எண்ணில் இருந்து போன் வந்தது. நன்றாக பேசிய அவர், ஒரு கட்டத்திற்கு மேல் ரொம்ப ஆபாசமாக பேசத் தொடங்கி விட்டார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
ஆனால் அவர் என்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறியதால் நான் போன் எண்ணை கட் செய்துவிட்டேன். ’ஆபாசமாக வீடியோ காலில் வா’ என்று அழைத்துக் கொண்டே இருந்தார். அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா? எந்த மாதிரியான எண்ணத்தில் அவர் வீடியோ கால் வர சொன்னார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆண்கள் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதற்கு இதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
என்னிடம் ஒபி ரவீந்திரநாத் அருவருக்கத் தக்க வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் ஊடகங்களில் நடந்ததை கூறுவேன் என்று ரவீந்திரநாத் மனைவியிடம் நான் கூறினேன். அதனால் இப்போது தமக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளது என்று காயத்ரி தெரிவித்தார்.மேலும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஓ.பி. ரவீந்திரநாத் குடும்பத்துடன் குடும்ப நண்பர்களாக பழகி வந்தேன். அவரை அண்ணனைப் போல நினைத்தேன்.
ரவீந்திரநாத் குடும்ப பெண்களிடம் யாரவது இப்படி பேசினால் அவர்கள் சும்மா இருப்பார்களா? சாதாரண வீட்டு பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? என்றும் காயத்ரி கேள்வி எழுப்பினார். மேலும் ரவீந்திரநாத் மற்ற ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது அவரின் மனைவிக்கு தெரிந்தும் பிள்ளைகளுக்காக பொறுமை காத்து வருகிறார். வாட்ஸப்பில் வீடியோ காலில் வரச் சொன்னதிற்கான ஆதாரங்களும், நள்ளிரவை கடந்தும் தனக்கு அவர் அழைத்து பேசியதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது.
ரவீந்திரநாத் செயல்பாடு குறித்து அவரது தந்தை ஓ. பன்னீர்செல்வத்திடம் நான் முறையிட்டேன் ஆனால் தமது பேச்சை கேட்கும் நிலையில் எனது மகன் இல்லை என ஓ. பன்னீர்செல்வம் சொல்லிவிட்டார். இந்த விவகாரம் அரசியல் கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.