விஜயலட்சுமி வழக்கை ரத்து செய்ய வேண்டும் - சீமானுக்கு உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!
சீமானுக்கு விரைவில் சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011-ல் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.பின்னர் நடிகை விஜயலட்சுமி தான் அளித்த பாலியல் புகாரைத் திரும்பப்பெறுவதாக 2012ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில் சீமான் மனுமீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசியல் காரணங்கள் காவல்துறை மீண்டும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனச் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தள்ளுபடி
மேலும் விஜயலட்சுமி, சீமானுடன் நெருங்கிப் பழகியுள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டார்.குறிப்பாகச் சிலரது மிரட்டல்கள் காரணமாகத் தான் நடிகை விஜயலட்சுமி வழக்கைத் திரும்பப் பெற்றார். எனவே, சீமானுக்கு எதிரான இந்த பாலியல் வழக்கை ரத்து செய்யக்கூடாது என நடிகை விஜயலட்சுமி தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி விஜயலட்சுமி புகாரைத் திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் 12 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.