திருமணத்தில் dj போட்ட பாட்டு - பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் தகராறில் நேர்ந்த கொடூரம்!
டி.ஜே பாடல் போடும் தகராறில் திருமணத்திற்கு வந்த விருந்தினர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண் வீட்டார்
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தானிபூரில் சென்ற வாரம் நடந்த திருமணத்தில், தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.
ஆனால் அது தெரியாமல் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது. இதனால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இறுதியில் இரு வீட்டாரும் ஒரு வழியாக சமாதானமாகி நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.
மாப்பிள்ளை வீட்டார்
ஆனால் மாப்பிள்ளை வீடு சார்பில் திருமணத்துக்கு வந்த விருந்தினர் ஒருவர் ஆத்திரம் அடங்காமல் பெண் வீடு சார்பில் வந்த விருந்தினர் இரவு 11 மணிக்கு வண்டியில் வீடு திரும்பும்போது வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.
அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பெண்ணின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இதனிடையே கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மாப்பிள்ளை பக்க உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.