ஒரே ஒரு கிரிக்கெட் பந்தினால் வெடித்த கலவரம் : பொதுமக்கள் அடித்துக் கொண்டதால் பரபரப்பு
கர்நாடகாவில் ஒரு கிரிக்கெட் பந்தினால் ஏற்பட்ட பிரச்சனைக்கு பொதுமக்களிடையே நடைபெற்ற அடிதடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கிராமங்களில் ஏற்படும் சண்டை, சச்சரவுகளை பற்றி கேள்விப் பட்டிருப்போம். குறிப்பாக திருவிழாக்களும், அதற்கான சண்டைகளை தீர்க்கவே ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கு முடிவு கட்டப்பட்டுவது வழக்கம்.
ஆனால் இங்கு அப்படியான குழுவால் தான் பொதுமக்களிடையே கலவரம் வெடித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் உ:ள்ள கோபுரா கிராமத்தில் சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ள நிலையில் அது தொடர்பான வரவு செலவு குறித்து இளைஞர்கள் விவாதித்துள்ளனர்.
அப்போது சுமார் 50 ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் பந்து வாங்கியதற்கான தொகை யார் கணக்கில் சேர்ப்பது என்பது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது. அப்போது அந்த குழுவில் இருந்த நபர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாகி, பின்னர் கைக்கலப்பானது.
இளைஞர்களுக்கு ஆதரவாக ஆண்கள், பெண்கள் என அவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து நடுரோட்டில் சரமாரியாக கம்பு, கைகளால் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகியுள்ளது.