பாகிஸ்தான் வீரர்கள் இடையே வெடித்த சண்டை - கிரிக்கெட் உலகினர் அதிர்ச்சி
பேட்டிங் பார்ம் விஷயத்தில் பாகிஸ்தான் வீரர் சர்ப்ராஸ் அகமது - முன்னாள் வீரர் சல்மான் பட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பாகிஸ்தானில் பிபிஎல் எனப்படும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இதன் 7வது சீசன் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் கியூட்டா கிளாடியேட்டர் அணிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் சர்ப்ராஸ் அகமது கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அந்த அணி இதுவரை 3 போட்டிகளில் 2 தோல்விகளயும் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சர்ப்ராஸ் அகமது இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை குவிக்ககாததும் கிளாடியேட்டர் அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியில் பேட்டிங் பார்மின்றி கழட்டி விடப்பட்ட சர்ப்ராஸ் அகமது இந்த தொடரில் ரன் குவிக்காதது பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் விமர்சனம் செய்திருந்தார்.
அவர் தனது யூடியூப் பக்கத்தில் சர்பிராஸ் தமக்கு சாதகமாக கூட எதுவும் செய்வதில்லை. அவர் தமக்குத் தாமே கடினமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்கிறார். அவரின் மோசமான செயல்பாட்டிற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் இருக்காது என நம்புகிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியில் அவர் 2வது தர விக்கெட் கீப்பராக இருப்பதுடன் கடந்த ஒன்றரை வருடங்களாக பயணம் செய்துவிட்டு மட்டும் வருகிறார்.
எனவே அவர் மற்ற வீரர்களின் விஷயத்தில் தலையிடுவதை விட தனது சொந்த செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என சல்மான் பட் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக பதிலளித்துள்ள சர்ப்ராஸ் அகமது ட்விட்டரில் பாகிஸ்தானுக்காக விளையாடிய போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தவர்களின் செயல்பாடுகளைப் பற்றி முடிவு எடுப்பதில் கடைசி ஆளாக இருக்கவேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.
Pakistan ko on duty beachne wala fixer jub niyat pe bhashan dega phir to Allah he Hafiz hai .#justsying
— Sarfaraz Ahmed (@SarfarazA_54) February 2, 2022