Wow.... What a Goal... - மெஸ்ஸி அணியினரை வீழ்த்தி சவுதி அரேபியா மாபெரும் வெற்றி...! - மாஸ் வீடியோ...!
கால்பந்து உலக கோப்பை தொடரில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா அசத்தல் வெற்றி பெற்றது.
கால்பந்து உலக கோப்பை தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா
இந்நிலையில், பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த அர்ஜெண்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் இன்று மாலை 3.30 மணிக்கு நேருக்கு நேர் மோதின. இந்த ஆட்டம் தொடங்கியதும், அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினார்கள்.
ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடயும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்து வந்தது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலித்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தார்கள்.
இதனால் இப்போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. இப்போட்டியின் முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றுள்ளது.
அசத்தல் கோல் -
What a Goal !!
— Muhammad Jamshaid?? (@JamshaidBM) November 22, 2022
Saudi Arabia beat Messi's team Argentina
I'm very happy
I thank Allah#السعوديه_الارجنتين #FIFAWorldCup
Argentina by 2-1 | Goat Ronaldo pic.twitter.com/AGonBVzxWn