உலக கோப்பை கால்பந்து ; மைதானத்தில் தீடீரென ஓடி வந்த நபரால் பரபரப்பு - ஷாக்கான வீரர்கள்...!

Football Viral Video FIFA World Cup Qatar 2022
By Nandhini Nov 29, 2022 05:59 AM GMT
Report

நடைபெற்ற போர்ச்சுகல்-உருகுவே போட்டியின் போது மைதானத்தில் தீடீரென்று நபர் ஒருவர் ஓடி வந்ததால் விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உலக கோப்பை கால்பந்து தொடர்

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

Rainbow flag - Save Ukraine -

கையில் கொடியுடன் ஓடி வந்த நபர்

நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுகல்-உருகுவே போட்டியின் போது மைதானத்தில் நபர் ஒருவர் வானவில் கொடியை பிடித்து ஓடிவந்தார். அவரது சட்டையின் முன்புறம் ‘உக்ரைனைக் காப்பாற்றுங்கள்’ என்றும், பின்புறம் ‘ஈரான் பெண்களுக்கான மரியாதை’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

திடீரென கையில் வானவில் கொடியுடன் கால்பந்து உலகக்கோப்பை போட்டியின்போது மைதானத்துக்குள் ஓடி வந்ததால் விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, காவலர்கள் ஓடி வந்து அவரை பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் சற்று நேரம் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.