தேற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன்... - கண்டுக்கொள்ளாத எம்பாபே...! - வைரலாகும் வீடியோ...!

Football Emmanuel Macron France FIFA World Cup Qatar 2022 Kylian Mbappé
By Nandhini Dec 19, 2022 12:14 PM GMT
Report

உலக கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வி அடைந்து, மைதானத்தில் சோகத்தில் ஆழ்ந்திருந்த எம்பாபேவை தேற்றிய பிரான்ஸ் அதிபரை அவர் கண்டுக்கொள்ளாத வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்த பிரான்ஸ்

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், பிரான்ஸ் அணியின் மோசமான முதல் பாதியிலிருந்து அந்த அணியை இரண்டாம் பாதியில் மீட்டு வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றதே எம்பாபேதான். 2ம் பாதியில் 80 நிமிடங்களுக்கு பின் இவர் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தது உலக ரசிகர்களை திரும்ப பார்க்க வைத்தார்.

இதுதான் ஆட்டத்தின் தீர்ப்பு முனையாக அமைந்தது. 2 கோல்கள் அதுவரை அர்ஜெடினா 2 கோல்களில் முன்னிலை வகித்த நிலையில், பிரான்ஸ் அணியை மீண்டும் மெயின் சீட்டில் அமர வைத்தது எம்பாபேதான். அதன்பின் கூடுதல் டைமில் அர்ஜென்டினா கூடுதலாக ஒரு கோல் போட, மீண்டும் எம்பாபே ஹாட் டிரிக் கோல் போட்டு ஆட்டத்தை எக்ஸ்ட்ரா டைமிலும் சமன் செய்து முடித்தார்.

அதன்பின் பெனால்டி சூட் அவுட்டிலும் கூட எம்பாபேதான் 4 கோல்களை போட்டார். தனது அணியை எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என்று இவர் நேற்று கடுமையாக போராடினார். ஆனால், அதிக தகுதி படைத்த அணியான அர்ஜென்டினா உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

fifa-world-cup-macron-macronistan-mbappe-france

பிரான்ஸ் அதிபரை கண்டுக்கொள்ளாத எம்பாபே...

வெற்றி பெற்ற அர்ஜென்டினா மைதானத்தில் வெற்றியை கொண்டாடியபோது, தோல்வியால் சோகத்தில் எம்பாபே மைதானத்திலேயே அமர்ந்து தலையை குனிந்து சோகத்தில் மூழ்கினார்.

இதைப் பார்த்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மைதானத்திற்கு ஓடி வந்து அவரை கட்டியணைத்து தேற்றினார். ஆனால், அவர் சொல்வதை எதையுமே எம்பாபே கண்டுக்கொள்ளாமல் எழுந்து சென்றார்.

அதேபோல், மேடையில் கூட விருது கொடுக்கும்போது, எம்பாபேவை இம்மானுவேல் மாக்ரோன் கட்டியணைத்து தேற்றினார். அப்போதும்கூட எம்பாபே, அப்படியே ஒதுங்கி அமைதியாக கண்டுக்கொள்ளாமல் நின்றார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூகவலைத்தளங்களில் எம்பாவே இந்த செயல் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.