கத்தாருக்கு வந்திறங்கிய மெஸ்சி... - மேளதாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்ற இந்திய ரசிகர்கள்..!
கத்தாருக்கு வந்திறங்கிய லயோனல் மெஸ்சியை ஆதரித்து ஆட்டம் பாட்டத்துடன் இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கால்பந்து உலக கோப்பை தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது.
இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. வரும் 20ம் தேதி கத்தார்- ஈகுவடார் அணிகள் இரவு 9.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன.
அர்ஜென்டினா அணி வந்தடைந்தது
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வீரர்கள் நேற்று காலை கத்தார் தலைநகர் தோகா வந்தடைந்தார்கள்.
'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா தனது தொடக்க ஆட்டத்தில் சவுதிஅரேபியாவுடன் வருகிற 22-ந்தேதி மோத இருக்கிறது. நான்கு முறை உலக சாம்பியனான ஜெர்மனி உலகக் கோப்பைக்காக கத்தாருக்கு வந்துள்ளது.
வரவேற்ற இந்திய ரசிகர்கள்
லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வீரர்கள் கத்தாருக்கு வந்ததையடுத்து, அவர்களை ஆதரித்து இந்திய ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Indians Supporting Team Argentina In Qatar World Cup ??
— Chikadhee ™ (@Chickadhi) November 12, 2022
This Vibes You Will Never Get From Any Sports ?
Welcome To FIFA World CUP The Biggest Sports Tournament In The World ?⚽#VamosArgentina ?? #Messi? pic.twitter.com/hI2i4BPP85
Immigrants from Indian sub-continent welcoming the Argentina delegation in Qatar for the World Cuppic.twitter.com/fzgyXWr4DK
— FIFA World Cup 2022 (@2022_QatarWC) November 11, 2022