Saturday, Apr 5, 2025

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லும் நாடு எது? - பட்டென மெஸ்சி சொன்ன பதில்..!

Lionel Messi Football FIFA World Cup
By Nandhini 2 years ago
Report

வரும் 20ம் தேதி தொடங்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போகும் வாய்ப்பு இந்த நாடுகளுக்கு இருக்கலாம் என்று மெஸ்சி கணித்து கூறியுள்ளார்.

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. வரும் 20ம் தேதி கத்தார்- ஈகுவடார் அணிகள் இரவு 9.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன.

fifa-world-cup-foot-ball-lionel-messi

மெஸ்சி கணிப்பு

அதிகளவில் உலக ரசிகர்களை கொண்டுள்ள 35 வயதான நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியிடம் இந்த உலக கோப்பையை வெல்லும் நாடு எது என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து மெஸ்சி பேசுகையில் -

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு சற்று வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன். ஆனால் உலக கோப்பை கால்பந்தில் வாகை சூடுவது யார்? என்பதை கணிப்பது மிகவும் கடினமான விஷயம். இப்போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் போட்டியில் களமிறங்க ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.