Sunday, Apr 6, 2025

உலகக்கோப்பை கால்பந்து - கேமரூன் அணியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அபார வெற்றி...!

Football Switzerland FIFA World Cup Qatar 2022
By Nandhini 2 years ago
Report

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், கேமரூன் அணியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. 

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

fifa-world-cup-2022-switzerland-foot-ball

கேமரூன் அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து 

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து - கேமரூன் அணிகள் நேருக்கு நேர் மோதின.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமநிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2 வது பாதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியின் பிரீல் எம்போலோ 48வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதற்கு பதில் கோல் அடிக்க கேமரூன் அணி கடிமையாகி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என சுவிட்சர்லாந்து வெற்றி அடைந்தது.