உலகக் கோப்பை கால்பந்து - போட்டி தோல்வியால் பதவியை ராஜினாமா செய்த நெதர்லாந்து அணி பயிற்சியாளர்...!

Football Netherlands FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 11, 2022 07:24 AM GMT
Report

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நெதர்லாந்து அணியின் தோல்வி காரணமாக பயிற்சியாளர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.

fifa-world-cup-2022-resignation-louis-van-gaal

நெதர்லாந்து அணி பயிற்சியாளர் ராஜினாமா

இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த உலகக் கோப்பை கால் இறுதிப் போட்டியில், பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டு நெதர்லாந்து அணி வெளியேறியது.

இதனையடுத்து, நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் (31) கால் அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நெதர்லாந்து அணியின் 3-வது முறையாக பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.

இது குறித்து லூயிஸ் வான் கால் கூறுகையில், இது என்னுடைய கடைசி ஆட்டம். இனி அணியின் பயிற்சியாளராக இருக்க மாட்டேன். திறமையான அணியை விட்டு நான் செல்கிறேன். இதுவரை நான் 20 ஆட்டங்களில் பயிற்சியாளராக இருந்துள்ளேன்.

அந்த சமயத்தில் அணி எந்த ஆட்டத்திலும் தோல்வி அடையவில்லை. அது எனக்கு பெருமை அளித்துள்ளது. இதுவே என் அனுபவதில் முதல் தோல்வி. முதல் பாதியில் எங்களது ஆட்டம் சிறப்பாகவே இல்லை.

ஆனால் 2-வது பாதியில் கடுமையாக போராடி 2 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக பெனால்டி ஷூட்-அவுட்டில் தோற்று விட்டோம் என்றார்.