மெஸ்ஸியின் கனவு ஒரு நாளும் பலிக்காது... நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.... - பிரான்ஸ் அணி பயிற்சியாளர் சவால்...!

Lionel Messi Football FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 16, 2022 10:56 AM GMT
Report

மெஸ்ஸியின் கனவு ஒரு நாளும் பலிக்காது என்றும், நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம் என்றும் பிரான்ஸ் அணி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகிறது.

குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா -

கடந்த 13ம் தேதி நள்ளிரவு நடைபெற்ற முதலாவது அரைஇறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த இரு அணிகளும் பயங்கரமான பலத்துடன் மல்லுக்கட்டி விளையாடின. இதனால் களத்தில் அனல் பறந்தது.

இந்த பரப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி மாபெரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

இறுதி சுற்றில் மல்லுக்கட்டப்போகும் பிரான்ஸ் - அர்ஜென்டினா

உலக மக்கள் எதிர்பார்த்த உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் நாளை மறுதினம் கோதாவில் நேருக்கு நேர் மோத உள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்றில் 3-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால், நாளை மறுதினம் நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் களத்தில் அனல் தெறிக்க உள்ளது. 

fifa-world-cup-2022-lionel-messi-deirdre-deschamps

மெஸ்ஸி கனவு பலிக்காது - பயிற்சியாளர் சவால்

அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். இதனால், அவரை கோப்பையுடன் வழியனுப்ப சக வீரர்கள் ஆசைப்படுகின்றனர்.

ஆனால், பிரான்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டீடைர் டெசாம்ஸ், ஒருபோதும் மெஸ்ஸியின் கனவை நிறைவேறாமல் தடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரான்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டீடைர் டெசாம்ஸ் பேசுகையில், 

 மெஸ்சியின் உலக கோப்பை கனவு நிறைவேறாமல் தடுக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய உள்ளோம். இந்த போட்டி முடிவில் ஒரு அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தப் போகிறது.

நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸி தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வருகிறார். 4 ஆண்டுக்கு முன் இருந்தது வேறு. இப்போ அவர் இருக்கிறது வேறு. அப்போ விளையாடும்போது அவர் நடுகள வீரராக ஆடினார். ஆனால் இப்போது இரு முன்கள வீரர்களில் ஒருவராக விளையாடி வருகிறார்.

அதிக நேரம் பந்து அவர் வசம் இருப்பதை அனைவராலும் பார்க்க முடிகிறது. நல்ல உடல்தகுதியுடன் விளையாடி வருகிறார். உலகின் மிகச்சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் என்பதில் சந்தேகமே கிடையாது. மெஸ்சியின் மிரட்டலை வெகுவாக தடுக்க எதிர்தாக்குதலில் முடிந்த வரை தீவிரம் காட்ட முயற்சி செய்வோம் என்றார்.