கோலாகல கொண்டாட்டத்தில் அர்ஜென்டினா - கோடிக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆட்டம்... பாட்டம்... - வைரல் வீடியோ...!

Lionel Messi Football Argentina FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 19, 2022 06:42 AM GMT
Report

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அர்ஜென்டினா கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய அர்ஜென்டினா

கத்தார் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நேற்று ஆரவாரத்துடன், உற்சாகத்துடன் தொடங்கியது.

உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியன் பட்டத்தை பெற்றி வரலாறு சாதனைப் படைத்துள்ளது.

fifa-world-cup-2022-lionel-messi-argentina

அர்ஜென்டினா மக்கள் கொண்டாட்டம்

இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ள அர்ஜென்டினாவிற்கு உலக மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜென்டினா கோலாகல கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது.

நேற்று இரவு முதல் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் கோடிக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த உலக மக்கள் அர்ஜென்டினாவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.