உலக கோப்பையை வாங்கியதும் நெஞ்சோடு அணைத்து குழந்தைபோல் முத்தம் கொடுத்த மெஸ்ஸி - வைரல் வீடியோ...!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி, உலக கோப்பையோடு மாஸா நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய அர்ஜென்டினா
கத்தார் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நேற்று ஆரவாரத்துடன், உற்சாகத்துடன் தொடங்கியது.
உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியன் பட்டத்தை பெற்றி வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
உலக கோப்பைக்கு முத்தமிட்ட மெஸ்ஸி
சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜென்டினா அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி மேடையில் உலக கோப்பையை கையில் வாங்கியதும், அதை குழந்தை போல் கையில் ஏந்தி நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு மாஸா அணி வீரர்களுடன் சேர்ந்து மேடையில் நடனமாடி கொண்டாடினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Congratulations Argentina for Winning #FIFAWorldCup #LionelMessi? | #ViratKohli? pic.twitter.com/jh24uNgFyC
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) December 19, 2022