உலகக்கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி...!
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், கோஸ்டாரிகாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
கோஸ்டாரிகாவை வீழ்த்திய ஜெர்மனி
நேற்று இரவு தோகாவில் உள்ள அல் பைட் மைதானத்தில் நடைபெற்ற 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா அணிகள் நேருக்கு நேர் மோதின.
பரபரப்பான தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெர்மனி வீரர் செர்ஜ் நாப்ரி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்படி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி முன்னிலை வகித்தது.
இதனையடுத்து, 2வது பாதியின் 58வது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணி வீரர் எல்ட்சின் தேஜேடா முதல் கோலை அடித்து போட்டியை சமன் செய்தார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் வர்காஸ் 70-வது நிமிடத்தில் 2வது கோல் அடித்து அணியை முன்னிலை பெற்ற செய்தார்.
இந்த பரபரப்பான சூழலில் ஆட்டத்தின் 73 மற்றும் 85-வது நிமிடங்களில் ஜெர்மனி அணி வீரர் காய் ஹேவர்ட்ஸ் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரரான நிக்லஸ் புல்க்ரூக் மற்றொரு கோலை அடிக்க ஆட்டம் ஜெர்மனிக்கு சாதகமானது.
இப்போட்டியின் முடிவில் கோஸ்டாரிகாவை 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்திய அபாரமாக வெற்றி பெற்றது. இருந்தாலும், ஜெர்மனி அணியால் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதிபெற முடியாமல் போனது.
Germany ?? rallied to beat Costa Rica ??, 4-2, in the #FifaWorldCup.
— The New York Times (@nytimes) December 1, 2022
But the win adds up to nothing, because Japan's victory means Spain and Japan will advance from the group. https://t.co/QBL6lueBpG pic.twitter.com/4Z39SxTllH

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
