உலக கோப்பை கால்பந்து : கானா அணியை வீழ்த்தி உருகுவே வெற்றி..!

Ghana FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 03, 2022 06:26 AM GMT
Report

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கானா அணியை வீழ்த்தி உருகுவே வெற்றி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது.

இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

fifa-world-cup-2022-foot-ball-uruguay-ghana

கானாவை வீழ்த்திய உருகுவே

நேற்று இரவு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் H பிரிவில் கானா அணியும், உருகுவே அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

நேற்று நடைபெற்ற பரபரப்பான இந்த ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் உருகுவே அணியின் ஜியார்ஜியன் முதல் கோல் அடித்து அசத்தினார்.

இதனால், உருகுவே அணி முன்னிலை பெற, 32வது நிமிடத்தில் 2வது கோலை அடித்தது. இதையும் ஜியார்ஜியனே அடித்து அசத்தினார். இந்த இரு கோல்களுக்கும் உருகுவே அணியின் சீனியர் வீரரான சுவாரஸ் அசிஸ்ட் செய்திருந்தார்.

இதனையடுத்து உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் H பிரிவில் கானா அணி 0 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே வெற்றி பெற்றது.