உலக கோப்பை கால்பந்து : செர்பியா அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து..!
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியா அணியை சுவிட்சர்லாந்து வீழ்த்தியது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
செர்பியா அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து
நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் G பிரிவில் செர்பியா அணி, சுவிட்சர்லாந்து அணி நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இப்போட்டியின் முடிவில், 3 - 2 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து சென்றது.
FINAL RESULT! ??? #SUI advances to the Round of 16 ?
— Team Albanians (@TeamAlbanians) December 2, 2022
Serbia 2-3 Switzerland ???? pic.twitter.com/9gfbrKCr3x