Wow... கால்பந்து உலக கோப்பை தொடர் - கலர் கலர் பட்டாசுகளால் ஜொலி ஜொலித்த கத்தார் ஸ்டேடியம்..!
கால்பந்து உலக கோப்பை தொடர் நாளை தொடங்குவதையொட்டி கலர் கலர் பட்டாசுகளால் கத்தார் ஸ்டேடியம் ஜொலி ஜொலித்தது.
கால்பந்து உலக கோப்பை தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது.
இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை கத்தாரில் தொடங்குகிறது.
இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. நாளை கத்தார்- ஈகுவடார் அணிகள் இரவு 9.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன.
ஜொலி ஜொலித்த கத்தார் ஸ்டேடியம்
இந்நிலையில், கத்தாரில் நாளை நடைபெறும் கால்பந்து உலக கோப்பையை சிறப்பிக்கும் வகையில் வண்ண விளக்குகள், கலர் கலர் பட்டாசு வெடித்து கத்தார் ஸ்டேடியம் ஜொலி ஜொலித்தது.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த உலக மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
FIFA World Cup Qatar 2022 Fireworks Opening
— Tansu YEĞEN (@TansuYegen) November 18, 2022
pic.twitter.com/jRMd18vwKx