wow... நாளை தொடங்கும் கால்பந்து உலக கோப்பை தொடர் - கத்தார் ஸ்டேடியங்களில் இத்தனை சிறப்பம்சங்களா?

Football Qatar FIFA World Cup Qatar 2022
By Nandhini Nov 19, 2022 07:13 AM GMT
Report

நாளை தொடங்க உள்ள கால்பந்து உலக கோப்பை தொடரில் விளையாடவுள்ள கத்தார் ஸ்டேடியங்களில் சிறப்பங்க பற்றி பார்ப்போம்.

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை கத்தாரில் தொடங்குகிறது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. நாளை கத்தார்- ஈகுவடார் அணிகள் இரவு 9.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன.

fifa-world-cup-2022-foot-ball-qatar-stadium

உலக கோப்பை மைதானங்களின் சிறப்பு அம்சங்கள் பார்ப்போம்;

லுசைல் ஐ கானிக் ஸ்டேடியம் -

லுசைல் ஐ கானிக் ஸ்டேடியம் கத்தாரில் உள்ள மிகப்பெரிய மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கணலாம்.

அல் பேத் மைதானம் -

அல் பேத் மைதானத்தில் 60 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. இந்த மைதானம் கத்தார் மற்றும் வளைகுடா மண்டலத்தில் நாடோடி மக்கள் பயன்படுத்திய கூடாரமான பேத் அல் ஷார் போன்று இந்த மைதானம் கட்டப்பட்டிருக்கிறது. போட்டிகள் முடிந்ததும் மைதானத்தின் மேல் அடுக்கு அகற்றப்பட்டு விடும்.

ஸ்டேடியம் 974 -

ஸ்டேடியம் 974 மைதானம் தோகா கடற்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் 40 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. இந்த மைதானம் கப்பலில் பயன்படுத்தப்படும் இரும்பு சரக்கு பெட்டகங்களை (கண்டெய்னர்) கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானம் உலக கோப்பை பந்தயம் முடிந்ததும் முற்றிலும் அகற்றப்பட்டு விடும்.

அல் துமாமா ஸ்டேடியம் -

அல் துமாமா ஸ்டேடியம் 'காபியா' வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானம் ஆண்கள் அணியும் தொப்பியை போன்று இருக்கும். இந்த மைதானத்தில் 40 ஆயிரம் இருக்கைகள் உள்ளன.

கலீபா சர்வதேச ஸ்டேடியம் -

கலீபா சர்வதேச ஸ்டேடியம் 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. கத்தாருக்கு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் கிடைப்பதற்கு முன்பு அங்கு இருந்த ஒரே மைதானம் இது தான். இந்த மைதானத்தில் 45 ஆயிரத்து 416 இருக்கைகள் உள்ளன.

எஜூகேசன் சிட்டி ஸ்டேடியம் -

எஜூகேசன் சிட்டி ஸ்டேடியம் பாலைவனத்தின் வைரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மைதானத்தில் 45 ஆயிரத்து 350 இருக்கைகள் உள்ளன.

அகமது பின் அலி ஸ்டேடியம் -

அகமது பின் அலி ஸ்டேடியம் 44 ஆயிரத்து 740 இருக்கள் உள்ளன. இந்த மைதானம் போட்டி முடிந்ததும் இருக்கை எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு விடும்.

அல் ஜனாப் ஸ்டேடியம் -

அல் ஜனாப் ஸ்டேடியம் பாரசீக வளைகுடாவில் ஆழ்கடலில் முத்து எடுக்க பயன்படுத்தப்படும் பாரம்பரிய படகு போன்று இதன் மேற்பகுதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மைதானத்தில் 40 ஆயிரம் இருக்கைகள் உள்ளன.