உலக கோப்பை கால்பந்து போட்டி - கத்தாருக்கு வந்தடைந்த அர்ஜென்டினா அணி!

Lionel Messi FIFA World Cup Argentina FIFA World Cup Qatar 2022
By Nandhini Nov 18, 2022 06:18 AM GMT
Report

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக அர்ஜென்டினா அணி கத்தாருக்கு வந்தடைந்தது.

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. வரும் 20ம் தேதி கத்தார்- ஈகுவடார் அணிகள் இரவு 9.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன.

fifa-world-cup-2022-foot-ball-qatar-lionel-messi

கத்தாருக்கு வந்தடைந்த அர்ஜென்டினா அணி 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வீரர்கள் நேற்று காலை விமானம் மூலம் கத்தார் தலைநகர் தோகாவுக்கு வந்தடைந்தார்கள்.

'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா தனது தொடக்க ஆட்டத்தில் சவுதிஅரேபியாவுடன் வருகிற 22-ந்தேதி மோத இருக்கிறது. நான்கு முறை உலக சாம்பியனான ஜெர்மனி உலகக் கோப்பைக்காக கத்தாருக்கு வந்துள்ளது.