உலக கோப்பை கால்பந்து தொடர் - இங்கிலாந்து - ஈரான் அணிகள் நேருக்கு நேர் மோதல்...!

Football Iran England FIFA World Cup Qatar 2022
By Nandhini Nov 21, 2022 06:52 AM GMT
Report

இன்று உலக கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து - ஈரான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. 

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. 

fifa-world-cup-2022-foot-ball-qatar-england-iran

இங்கிலாந்து - ஈரான் அணிகள் நேருக்கு நேர் மோதல் 

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

2-வது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோத உள்ளன. ஹரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த உலக கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிச் சென்றது.

தகுதி சுற்றில் 11 கோல்கள் அடித்த சர்தார் அஸ்மோன் பின்னங்காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருப்பது ஈரானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

121 ஆட்டங்களில் விளையாடிய அனுபவசாலியான கேப்டன் ஈசன் ஹஜ்சாபி, மேதி தரேமி, அலிஜெரா ஜஹன்பாக்‌ஷ் ஆகியோரை தான் அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது.