வெற்றிபெற எதிரணி வீரர்களுக்கு லஞ்சம் கொடுக்க கத்தார் முயற்சி...? வெளியான தகவலால் பரபரப்பு...!

Football Qatar FIFA World Cup Qatar 2022
By Nandhini Nov 21, 2022 08:04 AM GMT
Report

முதல் போட்டியில் வெற்றிபெற எதிரணி வீரர்களுக்கு லஞ்சம் கொடுக்க கத்தார் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

fifa-world-cup-2022-foot-ball-qatar

லஞ்சம் கொடுக்க கத்தார் முயற்சி..?

தற்போது மிகப்பெரிய குற்றச்சாட்டில் கத்தார் சிக்கி இருக்கிறது.

சவுதி அரேபியாவில் உள்ள பிரிட்டிஷ் மையத்தின் பிராந்திய இயக்குநருமான அம்ஜத் தாஹா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தன் பக்கத்தில், "கத்தார் நாடு தங்களுக்கு எதிரான போட்டியில் தோற்கவேண்டும் என்று எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு 7.4 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முன் வந்து உள்ளது. ஐந்து கத்தார் நாட்டினரும் மற்றும் ஈக்வடார் நாட்டினரும் இதை உறுதிப்படுத்தினர். இது தவறான தகவல் என்று நாங்கள் நம்புகிறோம். இதை பகிர்வது முடிவை பாதிக்கும் என நம்பினாலும் பிபா ஊழலை எதிர்க்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடக்க நாளான நேற்று 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதின. இதில் ஈகுவடார் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.